உல்பா தீவிரவாதிகளுக்கு: பிரதமர் கண்டனம்

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (11:51 IST)
அசாம் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கோழைத்தனமானது என்றும், மனிதாபிமானமற்ற செயல் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அசாமில் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு, தனியார் துறை அதிகாரிகள் உல்பா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

உல்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய உணவுக் கழக அதிகாரி பி.சி.ராம், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நடந்த சுப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார்.

அதேபோல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய சிமெண்ட் கழக அதிகாரி கைலாஷ் நாத் ஷா, மற்றொரு அதிகாரி ஜா ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். தீவிரவாதிகளின் இந்த செயல்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கோழைத்தனமானது என்றும், மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்