ஹனீஃபை நியாயமாக நடத்த வேண்டும் : மத்திய அரசு!

Webdunia

திங்கள், 16 ஜூலை 2007 (19:50 IST)
கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துமாறு ஆஸ்ட்ரேலிய அரசிற்கு மத்திய கோரிக்கை விடுத்துள்ளது!

இந்தியாவிற்கான ஆஸ்ட்ரேலிய தூதர் அயலுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் நேரடியாக இந்த வைக்கப்பட்டதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் நவ்ஜேத் சார்ணா கூறினார்.

"ஆஸ்ட்ரேலிய சட்டத்தின் படி, மருத்துவர் மொஹம்மது ஹனீஃபை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று ஆஸ்ட்ரேலிய அரசிற்கு அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது" என்று நவ்ஜேத் சார்ணா கூறினார்.

கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட மொஹம்மது ஹனீஃப் இன்று காலை பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவருடைய பணி அனுமதியை (விசா) ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்ததற்குப் பிறகு இந்திய அரசு ஆஸ்ட்ரேலிய தூதரிடம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்