குடியரசு துணை தலைவர் தேர்தல்: ரஷீத் மசூத் 3 வது அணி வேட்பாளர்

Webdunia

திங்கள், 16 ஜூலை 2007 (19:09 IST)
PIB PhotoPIB
குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும், குடியரசு துணை தலைவர் தேர்தலில் தங்கள் கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் என ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷீத மசூத் போட்டியிடுவார் என அக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான சமாஜ் வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் இன்று அறிவித்துள்ளார்.

குடியசுத் துணை தலைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 3 வது அணி மட்டுமே வேட்பாளரை அறிவித்திருப்பது குறிப்பிடதக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்