குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: பரதன் கருத்து

Webdunia

புதன், 4 ஜூலை 2007 (20:46 IST)
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக தமக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் தெரிவித்துள்ளார்.

ரான்சியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்ட்டியளித்தார். அப்போது, குடியசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வந்தால் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சேட்டர்ஜி பெயர் பரிசீக்கப்படுகிறதே என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து சோம்நாத் சேட்டர்ஜியிடம் கேட்க வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்