தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கூட்டு நடவடிக்கை அவசியம் : பிரதமர்!

Webdunia

புதன், 4 ஜூலை 2007 (15:21 IST)
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசுடன் இணைந்து, பொது மக்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து நீர் ஆதாரங்களை பாதுக்க வேண்டும், இலையென்றால் எதிகாலத்தில் நாடு மிகப் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடக் கூடும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்!

கிராமப்புற தண்ணீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் குறித்த 2 நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மன் மோகன் சிங் இதனை தெரிவித்தார். 2006-07 ஆம் ஆண்டில் கிராமப் புறங்களில் குடி நீர் வழங்க ரூ.4,560 கோடி செலவிடப்பட்டதாகவும், தற்போது நடப்பு ஆண்டில் அது ரூ.6,500 கோடியாக அதிகரிக்கப் பட்டிருப்பதாகவும் மன்மோகன் கூறினார்.

குடிநீர்ப் பற்றாக்குறையை போக்க நாம் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும், இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து உரிய வழிமுறைகளை அரசு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மன்மோகன் சிங், இதன் மூலம் தண்ணீரைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்