ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தில் வீட்டிற்குள் பதுங்கியுள்ள 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததையடுத்து கடும் மோதல் நடந்து வருகிறது!
மத்திய காஷ்மீரில் உள்ள காந்தர்பால் மாவட்டம் சனூரா என்ற இடத்தில் உள்ள வீட்டிற்குள் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தொடர்பான தகவலையடுத்து ஜம்மு-காஷ்மீர் காவல் படையினர், இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள் படைப் பிரிவினரும் சுற்றி வளைத்துள்ளதாகவும, தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து கடுமையான மோதல் நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் இருந்து 250 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.