முத்திரைத்தாள் மோசடி : தெல்கிக்கு 13 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்!

Webdunia

வியாழன், 28 ஜூன் 2007 (18:59 IST)
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து புனேயில் உள்ள மாஹாராஷ்டிரா குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதுல் ரகீம் தெல்கி, நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டு யரவாடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்திரைத்தாள் அச்சடித்தது, அவற்றை விற்பனை செய்தது ஆகிய குற்றங்களுக்காக தெல்கி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 43 பேரும் தங்கள் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தெல்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள ஒரு நாள் கால அவகாசம் கோரியிருந்தார்.

இந்நிலையில் புனே நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய தெல்கி, நீதிபதி சித்ரா பேடியிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்