தேரா மதகுரு கைது உத்தரவு: சிர்சாவில் பதற்றம்

Webdunia

வியாழன், 28 ஜூன் 2007 (16:40 IST)
தேரா சச்சா சவுதா மதகுரு குர்மீட் ராம் ரஹீம் சிங்கை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து சிர்சாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தேரா சச்சா சவுதா மத குருவான குர்மீட் ராம் ரகீம் சிங், அகால் தத் மதத் தலைவரான குரு கோவிந்தை போல் உடை அணிந்ததையடுத்து பஞ்சாபில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

பின்னர் இந்த செயலுக்கு தேரா சச்சா சவுத மத குரு குர்மீட் ராம் ரஹீம் மன்னிப்பு கேட்டார். என்னினும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பஞ்சாப் அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து குர்மீட் ராம் ரகீம்சிங்கை கைது செய்ய அரியான காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகமான சிர்சா பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

சிர்சாபகுதியின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பதற்றன் நிறைந்த பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் சிர்சா துணை ஆணையர் உமா சங்கர் தொலைபேசி வழியாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்