முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு: கேரளா நிராகரிப்பு

Webdunia

வியாழன், 28 ஜூன் 2007 (13:30 IST)
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டது.

கேரள காவல் துறையினர் முல்லை பெரியாறு அணையின் மதிற்சுவரை இடித்ததைத் தொடர்ந்து அங்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், கேரள சட்டப் பேரவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் அச்சுதானந்தன், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கக் கோறும் தமிழக அரசின் கோரிக்கை ஏற்க முடியாது என்றார்.

மேலும், இந்த விஷயத்தில் அரசு தெளிவாக இருப்பதாகவும், அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்

வெப்துனியாவைப் படிக்கவும்