அமெரிக்க கப்பற்படையின் விமான தாங்கி அணு ஆயுதக் கப்பலான நிமிட்ஸின் வருகையால் சென்னையை அடுத்த கடற்பகுதியில் எந்தவிதமான சுற்றுச்சூழல் கேடும் நேராத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது,
அமெரிக்க - இந்திய ராணுவங்களுக்கு இடையிலான நட்பின் அடிப்படையில் சென்னை துறைமுகப்பகுதிக்கு நிமிட்ஸ் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், அது சென்னை கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எந்த விதமான கதிர்வீச்சோ, அல்லது மற்ற எந்தவிதமான சுற்றுச்சூழல் கேடோ ஏற்படா வண்ணம் கண்காணிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஒவ்வொரு மணி நேரமும் கதிர்வீச்சு தொடர்பான கண்காணிப்பு உடன்படிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். (யு.என்.ஐ.)