குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன் கூறியுள்ளார்!
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பரதன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இடதுசாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசி, ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு வேட்பாளரை முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர்தான் போட்டியிட வேண்டும் என்றும், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்றும் பரதன் கூறியுள்ளார்.