குஜராத் போலி என்கவுண்டர் : மேலும் ஒரு காவல் அதிகாரி சரண்!

Webdunia

வெள்ளி, 22 ஜூன் 2007 (17:18 IST)
குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த காவல்துறை உயர் அதிகாரி பார்மர் இன்று அம்மாநில குற்றப் புலனாய்வு காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் ஷெராஃபுதின் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை நேரில் பார்த்த அவரது மனைவி கவுசர் பீயும் எரித்துக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் மூன்று இந்திய காவல் துறை அதிகாரிகள் உள்பட 7 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையின் துணை கண்காணிப்பாளர் பார்மர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று பார்மர் காந்திநகர் குற்றப் பிரிவு காவல் அதிகாரி முன்னிலையில் சரணடைந்தார். பிணைய விடுதலை கோரி பார்மர் தாக்கல் செய்த செய்த மனுவை அமர்வு நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்