பெண்களுக்கான மரியாதை : பிரதீபா பாட்டீல்

Webdunia

சனி, 16 ஜூன் 2007 (14:36 IST)
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இது பெண்ணுரிமையை நிலைநாட்டும் தூண்டுகோலாக அமையும் என்றும் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு, இடது சாரிகள் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதீபா பாட்டீல் இன்று டெல்லி வந்தார்.

அங்கு அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீபா பாட்டீல், நாட்டில் உயர்ந்த பதவிக்கு தம்மை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இது பெண்ணுரிமையை நிலைநாட்ட தூண்டுகோலாக அமையும் என்றும், நாடு பெண்கள் மீது கொண்டுள்ள மரியாதையை வெளிப்படுத்துவாதாக இது உள்ளது என்றும் பிரதீபா பாட்டீல் தெவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்