நைஜீரியாவில் கடத்தப்பட்ட 10 இந்தியர்கள் விடுதலை: மீண்டும் 2 இந்தியர்கள் கடத்தல்

Webdunia

சனி, 16 ஜூன் 2007 (12:06 IST)
நைஜீரியாவில் கடத்தி செல்லப்பட்ட 10 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவு 2 இந்தியர்கள் நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 1 ஆம் தேதி நைஜீரியாவில் உள்ள இந்தோனிஷிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்கள் 10 பேரை, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் கம்பெனி மேலாளர் அருண் தனேஜா என்பவரும் ஒருவர்.

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், இந்தோனிஷிய கம்பெனி சார்பில் இயக்குனர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, கடத்தப்பட்ட 10 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு நைஜீரியாவில் 2 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்