உணவுப் பொருட்கள், எரிபொருள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் பணவீக்கம் 0.05 விழுக்காடு குறைந்துள்ளது!
மே 26 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.85 விழுக்காடாக இருந்த ரூபாயின் பணவீக்கம், ஜூன் 2 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.80 ஆக குறைந்துள்ளது.
பருப்பு, கம்பு, மைதா ஆகியவற்றின் விலைகள் நன்கு குறைந்துள்ளது. சோயா பீன் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட உணவு எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. (பி.டி.ஐ.)