மும்பை தொடர் குண்டு வெடிப்பு: ஒருவருக்கு ஆயுள் இருவருக்கு 5 ஆண்டு சிறை

Webdunia

வியாழன், 14 ஜூன் 2007 (18:45 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களில், சலீம் ரகீம் ஷேக் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து தடா சிறப்பு நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 ஆண்டு மும்பையில் பல பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பங்கள் நிகழ்ந்தன. இதில், 257 பேர் கொல்லப்பட்டனர் 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து 100 பேர் குற்றவாளிகள் என தடா சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது .

முக்கிய குற்றவாளியான டைகர் மேமனின் நெறுக்கிய கூட்டாளியான சலீம் ரகீம் ஷேக் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து தடா சிறப்பு நீதி மன்ற நீதிபதி பி.டி. கோடே தீர்ப்பளித்தார்.

மேலும், குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷைபுனிசா, மொபினா பயா பிவன்டிவாலா ஆகிய இரண்டு பெண்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி கோடே இன்று தீர்ப்பளித்தார்.




வெப்துனியாவைப் படிக்கவும்