மேற்கு வங்கத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (15:51 IST)
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தென் கிழக்கு பருவ மழை பெய்யத்தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை இன்றும் தொடர்ந்தது. இதனால் ஹவுரா உள்ளிட்ட பல பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்து விட்டதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் மழை பெய்வதால் விமான சேவையும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்