ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தையொட்டி குர்ஜார் இன பிரதிநிதிகள் டெல்லியில் இன்று முழு அடைப்பு போரட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் வசிக்கும் குர்ஜார் இன மக்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது கலவரமாக மாறியதையடுத்து காவல் துறையினர் நடத்திய சுப்பாக்கி சூட்டில் 25 பேர் பலியாயினர்.
இந்நிலையில், குர்ஜார் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, மீனா இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தற்போது இன கலவரமாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த குர்ஜார் இன பிரதிநிதிகளுடன் 4 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அம்மாநில முதலமைச்சர் வசுந்திரா ராஜே பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
இதற்கிடையே, குர்ஜார் இன மக்கள் தலைநகர் டெல்லியில் நேற்று பேரணி நடத்தினர். தொடர்ந்து டெல்லியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.