நாடாளுமன்ற அவைகள் காலவரையின்றி தள்ளிவைப்பு!

பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் இயங்கவிடாமல் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும், ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் தொடர்ந்து செயல்பட்டதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன!

மாநிலங்களவை காலவரையின்றி தள்ளிவைப்பது குறித்து கவலை தெரிவித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தாங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை உறுப்பினர்கள் மறந்துவிட்டதன் காரணமாக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஒவ்வொரு நாளும் முடக்கப்பட்டதாகக் கூறினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எல்லாவற்றையுமே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் நடந்தவைகள் குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறிய மன்மோகன் சிங், எதிர்வரும் மழைக்காலக் கூட்டத் தொடராவது அமைதியான சூழலில் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல, மக்களவையும் இன்று காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்