குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான எல்லைகளை வரையரை செய்வது தொடர்பாக பொது மக்களின் கருத்துகளை கேட்டறியும் நிகழ்ச்சி இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, மதுரை மத்திய சட்டப் பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகம் இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிகப்படும் என்றார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நடுநிலையான தேர்தல் அதிகாரியை நியமிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர் இது குறித்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருப்பதாக கோபால் சாமி தெரிவித்தார்.