உ.பி. தேர்தல் முடிவு: பகுஜன் சமாஜ்க்கு அதிக இடங்கள்

7 கட்டமாக நடைபெற்ற உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

சற்று முன் நிலவரப்படி மாயாவதின் பகுஜன் சமாஜ் கட்சி 183 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ் வாதி 95 இடங்களிலும், பா.ஜ.க. 63 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், மற்றும் கட்சிகள் 28 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

இன்று மாலைக்குள் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து தொகுதிகளின் முழு விபரம் வெளியாகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்