எரிநீரை உருவாக்க ISS தீவிரம்

திங்கள், 6 ஜனவரி 2014 (19:50 IST)
எரிநீரை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்கலம் ஈடுபட்டுள்ளது.
FILE

மேம்பட்ட பிறழ் நீர் என்று அழைக்கப்படும் இந்த விநோதமான நீரானது, திடப்பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இல்லாமல் ’திரம் போன்ற வாயு’வாக இருக்கும்.

கடல் மட்டத்தில் காணப்படும் காற்றழுத்தம் மூலமாக 217 மடங்கு சாதாரண திரவ நீரை அழுத்தி, 373 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் சூடுப்படுத்தப்படும் என்று ‘டிஸ்கவரி செய்திகள்’ கூறுகின்றன. மேம்பட்ட பிறழ் நீரானது எந்த ஒரு கரிம பொருளையும் வேகமாக உடைத்து, தீப்பற்றிக்கொண்டாலும், நெருப்பு பகுதியாகக் காணப்படாது. விண்வெளி, பூமி ஆகிய இரண்டிலும் உள்ள கழிவு பொருட்களை அகற்ற உதவும்.

இந்த பிறழ் நீரை எரிப்பதால் திரவப் பொருட்களில் உள்ள தீங்கான கழிவுகள் விலக்கப்படுவதுடன், நீர், கரியமில வாயு போன்ற ஆபத்தான பொருட்களையும் சுலபமாக வடிகட்ட முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்