மோடிக்கு விசா கொடுக்க கூடாது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

புதன், 20 நவம்பர் 2013 (11:16 IST)
FILE
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பளருமான நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மத சுதந்திரத்தை மீறியதாகக்கூறி நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிப்பதை நீட்டிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கீத் எலிசன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிட்ஸ் மற்றும் 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.

எனவே நரேந்திர மோடி, 2002 கலவரம், அமெரிக்க விசா பிரச்சனைகள் ஓயப்போவதில்லை என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்