வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட மறுப்பு

சனி, 20 ஏப்ரல் 2013 (17:59 IST)
அணு ஆயுதத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம், ஆயுதக் குறைப்பு குறித்து வேண்டுமானால் பேச்சு நடத்தத் தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போர் நடத்த வடகொரியா தயாராகி வருவதாலும் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை வைத்துள்ள வடகொரியா சமீபத்தில் மீண்டும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டு தனது அணு ஆயுத வலிமையை அதிகரித்துக் கொண்டுள்ளது.

அந்நாடு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இதனிடையே பிரச்னையை தீர்த்துக் கொள்ள பேச்சு நடத்த வேண்டுமென்று சீனா உள்ளிட்ட வடகொரியாவின் நட்பு நாடு மூலம் அந்நாட்டு சர்வதேச அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் வலியுறுத்தலால் தங்கள் நாட்டு மீது ஐநா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அந்நாட்டின் முக்கிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆயுதங்களைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் எத்தனை முறை வேண்டுமானாலும் பேச வடகொரியா தயாராக இருக்கிறது. ஆனால் அணு ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம். இது விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எப்போது அணு ஆயுதங்களைக் கைவிடுகிறதோ, அப்போது வடகொரியாவும் ஆணு ஆயுதங்களைக் கைவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்