தென்னிந்திய கப்பல்களை புறக்கணிப்போம் -கொழும்பு துறைமுக ஊழியர்கள்

புதன், 3 ஏப்ரல் 2013 (11:44 IST)
FILE
இந்தியாவில் தொடர்ந்து இலங்கை புத்த பிட்சுக்கள் தாக்கப்படுவது மற்றும் தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் தொடர் போராட்டங்களை கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்தும், தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த புத்த பிட்சுக்கள் தாக்கபடுவதை கண்டித்தும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாக துறைமுகள் ஊழியர்கள் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்துக் கூறிய துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா, தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த புத்த பிட்சுக்கள் தாக்கபடுவதை கண்டு எங்களால் அமைதியாக இருக்கமுடியாது என்றார்.

ஆனால், தொழிலாளர்களின் இந்த மிரட்டல் அறிவிப்பு குறித்து கொழும்பு துறைமுக நிர்வாகத்திடமிருந்து எந்த வித தகவலும் வரவில்லை என்று துறைமுக அதிகாரி நளின் அபோன்சோ தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்