ஜப்பானில் மீண்டும் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (10:18 IST)
FILE
ஜப்பானில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் ஜப்பானில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கிழக்கு பகுதியான மியாகோவில் இருந்து 66 மைல் தொலைவிலும் டோக்யோவிலிருந்து வடகிழக்கு பகுதியில் இருந்து 526 மைல் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டரில் 6 ஆக பதிவு ஆன இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.