நபிகளை இழிவுப்படுத்த படம் எடுத்த 7 பேருக்கு தூக்கு
வெள்ளி, 30 நவம்பர் 2012 (12:29 IST)
FILE
'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் படத்தை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை என்று எகிப்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் எகிப்திய கிறிஸ்த்தவர்களான இந்த ஏழு பேரில் ஒருவர் நகோலா பஸிலி , அவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் தண்டனை அனுபவித்து வருகிறார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் எகிப்தின் 'காப்டிக் ஆர்த்தோடெக்ஸ்' தேவாலய நீதிமன்றம் நேற்று குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை என அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் கருத்து கூற மறுத்துவிட்ட நீதிமன்றம்.
தேவாலய அதிகாரி கூறுகையில், இப்படம் குறித்து ஏற்கனவே தேவாலயம் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்றும் பொதுவாக நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து தேவாலயம் கருத்து எதுவும் தெரிவிக்காது என்றும் கூறினார்.