இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
செவ்வாய், 13 நவம்பர் 2012 (09:22 IST)
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே டெல்லியில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மன்மோகன் சிங், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உரங்கள், கனிமச் சுரங்கம், இளைஞர் மேம்பாடு மற்றும் சிறிய அளவிலான திட்டங்கள் ஆகிய 4 துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். இருநாடுகளுக்கு இடையிலான உறவு சிறப்பாக உள்ளதாகவும், இது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் இந்திய உதவியுடன் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தங்கள் நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்கள் முன்வர வேண்டும் என்றும் ஹமீத் கர்சாய் வேண்டுகோள் விடுத்தார்.