ஈரானில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை: ஐ.நா. கண்டனம்
புதன், 25 ஜனவரி 2012 (19:25 IST)
ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்கூறிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 34 பேர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த 34 பேருக்கும் கடந்த 19 ஆம்ம் தேதியன்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது.இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை கூறுகையில், சட்டப்படி வெளிப்படையாக விசாரணை நடந்திருந்தால்கூட ஒரே நாளில் 34 பேரை தூக்கில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,200 பேருக்கும்,கடந்த ஒன்றரை மாதத்தில் 64 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.