அமெரிக்காவிலும் விடுதலைப் புலிகளின் தபால் தலைகள் வெளியீடு

புதன், 4 ஜனவரி 2012 (13:57 IST)
பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து அமெரிக்காவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தபால் தலைகளை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இயங்கி வரும் இரண்டு விடுதலைப்புலி அமைப்புக்களினால் இந்த தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடுத்திருந்த மனோகரன் என்பவரின் மகனின் உருவப்படத்தை உள்ளடக்கிய முத்திரையும் வெளியிடப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் (Tamils Against Genocide) மற்றும் ஒபாமாவுக்கான தமிழர்கள் (Tamils For Obama) ஆகிய அமைப்புக்களே இவ்வாறு முத்திரை வெளியிட்டுள்ளன.

இந்த அஞ்சல் முத்திரைக்கு அமெரிக்க தபால் துறை அனுமதி வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்