ஆப்கான் எல்லையில் படைகளை குவிக்க பாக். திட்டம்

சனி, 10 டிசம்பர் 2011 (15:28 IST)
ஆப்கானையொட்டிய தனது எல்லையில் தாக்குதல் நடத்தும் படைகளை குவிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் படைகளை ஈடுபடுத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தானில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ படை நடத்திய தாக்குதலை அடுத்து, எல்லைகளில் நேட்டோவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வழிகளை பாகிஸ்தான் ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவில் பேசிய பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கைப் பிரிவு இயக்குனர் அஷ்பாக் நதீம் அகமது,நேட்டோ தாக்குதலுக்குப் பின் மேற்குப் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதை எதிர்கொள்ளும் வகையில் அங்கு படைகள் ஈடுபடுத்தப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்