இலங்கையில் நடப்பவற்றை ஹிலாரி கிளின்டனிடம் தெரிவிப்போம்: த.தே.கூ.

திங்கள், 17 அக்டோபர் 2011 (12:26 IST)
இலங்கையில் நடப்பவற்றை அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் தெரிவிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரும் 25 ஆம் தேதி இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு,அங்கு ஹிலாரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து ஹிலாரி கிளின்டனுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வாஷிங்டனுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அந்நாட்டின் தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்கையும் சந்திக்கவுள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சியான்றின் பிரதிநிதிகளை அமெரிக்க அரசாங்கம் முதல் தடவையாக அதிராகர்ப்பூர்வமாக பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் பிரிட்டன் மற்றும் கனடாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்