சமூக வலைதளங்களை பயன்படுத்த சீன இராணுவத்தினருக்கு தடை

புதன், 1 ஜூன் 2011 (19:35 IST)
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தங்கள் நாட்டு இராணுவ வீரர்கள் பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது.

இராணுவம் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியாகாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தவும்,இணையதளம் மூலம் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும், திருமணப் பொருத்தம் பார்க்கவும் இராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், பணியில் இல்லாத நேரத்தில் வெளியே இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அதற்கான அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்