தளபதி ரமேஷ் சித்ரவதைக்கு பின்னர் கொல்லப்பட்டுள்ளார்: புதிய ஆதாரம்
வியாழன், 28 ஏப்ரல் 2011 (13:36 IST)
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க தளபதி ரமேஷ் கடும் சித்ரவதைகளுக்குப் பின்னர் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் தற்போது வெளியான போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளது.
தளபதி ரமேஷ் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பிறகு, அவர் நெருக்கடியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், அவர் இராணுவக் கனரக வாகனமொன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் என இரண்டு வீடியோக்கள் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தன.
எனினும் ரமேஷ் எங்கே என்ற அவரது குடும்பத்தினரின் விசாரிப்புக்கு அவரைத் தாங்கள் பார்க்கவில்லை என்ற இலங்கை இராணுவம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.இருந்தும் இவர் நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் இணைந்து சரணடைந்தார் என்றே கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மற்றொரு தொகுதி போர்க் குற்றப் படங்களில் ஒருவர் ரமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் ஒரு படத்தில் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானுவும் இதேப்போன்று சித்ரவதைகளுக்கு பின்னர் கொல்லப்பட்ட கிடக்கும் படம் வெளியாகி உள்ளது.