இ‌ந்‌‌தியா கரு‌த்து‌க்கு ‌‌‌சீனா ‌ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம்: நிருபமா ரா‌‌வ்

ஞாயிறு, 13 பிப்ரவரி 2011 (12:21 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் உடனான ‌பிர‌ச்சனைகளு‌க்கு இ‌ந்‌தியா‌வி‌ன் கரு‌த்து‌களு‌க்கு ‌சீனா ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்று அயலுறவு‌த்துறை செயல‌ர் ‌நிருபமா ரா‌வ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வில ‌நியூயா‌ர்‌க்‌கி‌ல் நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் பே‌சிய அவ‌ர், ப‌ா‌கி‌ஸ்தா‌னி‌ன் அணுஆயுத த‌ி‌ட்ட‌ங்களு‌க்கு ஆதரவு அ‌ளி‌ப்பது கு‌றி‌த்து ‌சீனா ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் அணுஆயுத ‌‌தி‌ட்ட‌ங்களா‌ல் ஆ‌சிய ‌பிரா‌ந்‌திய‌த்த‌ி‌ல் பாதுகா‌ப்பு அ‌‌ச்சுறு‌த்த‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று ‌நிருபமா ரா‌வ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஐ.நா. பாதுகா‌ப்பு கவு‌ன்‌சி‌‌லி‌ல் இ‌ந்‌தியா ‌நிர‌ந்தர உ‌று‌ப்‌பினராக சேர ‌சீனா இதுவரை வெ‌ளி‌ப்படையாக ஆதரவு தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்