விக்கிலீக்ஸை காப்பாற்றுமாறு ஆதரவாளர்களுக்கு அசாங்கா வேண்டுகோள்

செவ்வாய், 14 டிசம்பர் 2010 (20:15 IST)
"விக்கிலீக்ஸ்" இணையதளத்தையும் அதன் சேவையையும் காப்பாற்றும்படி ஜுலியன் அசாங்கா தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அசாங்கா தனது ஆதரவாளர்களுக்கு விடுத்த செய்தியை அவரது தாயார் ஆஸ்ட்ரேலிய தொலைக்காட்சி ஒன்றில் வாசித்தார்.

அதில் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ள அசாங்கா, விக்கிலீக்ஸின் எதிர்காலத்திற்காக போராடுமாறு தனது ஆதரவாளர்களை கோரியுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளம், அதன் ஊழியர்கள், எனது பணி ஆகியவற்றை சட்டவிரோத மற்றும் அநீதியான நடவடிக்கைகளில் இருந்து இந்த உலகம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசா, மாஸ்டர் கார்ட், பேபால் ஆகியவை அமெரிக்க அயலுயுறவுக் கொள்கைக்கு ஏற்ப செயல்படுவதாகவும் அசாங்கா அதில் குற்றம் சாற்றியுள்ளார்.

அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை அம்பலப்படுத்திய "விக்கிலீக்ஸ்" நிறுவனர் அசாங்கா, பாலியல் குற்றச்சாற்று தொடர்பாக ஸ்வீடன் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவின் பேரில் லண்டனில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்