காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை நிறுத்தியது சீனா
திங்கள், 13 டிசம்பர் 2010 (13:19 IST)
காஷ்மீர் பகுதி மக்களுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஓராண்டாக காஷ்மீரில் இருந்து சீன விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் சீனா தனி விசாவை வழங்கி வந்தது.
இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த இந்தியா, சீனா தனது இந்த போக்கை கைவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த விடயத்தில் சீனாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன பிரதமர் வென் ஜியாபோ, வருகிற 15 ஆம் தேதியன்று இந்தியா வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.