காஷ்மீர் மக்களுக்கு பாக். தொடர்ந்து ஆதரவளிக்கும்: கிலானி
சனி, 4 டிசம்பர் 2010 (15:45 IST)
காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து முழு அளவிலான தார்மீக, தூதரக மற்றும் அரசியல் ஆதரவை பாகிஸ்தான் அளிக்கும் என்றார்.
இக்கூட்டத்தில் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களின் உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக கூட்டம் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.