பாக்.கில் காவல் நிலையம் மீது தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி
திங்கள், 6 செப்டம்பர் 2010 (13:16 IST)
வட மேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது இன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 19 பேர் பலியானார்கள்.
வடமேற்கு பாகிஸ்தானின் லக்கி மார்வத் டவுனில் உள்ள காவல் நிலையம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.
இதில் காவல் நிலையம், அருகில் உள்ள மசூதி, அரசு அலுவலகங்கள் சேதம் அடைந்தன.
இந்த சம்பவத்தில் 19 காவலர்கள் பலியானார்கள். இதில் 4 பேர் பள்ளிக்குழந்தைகள் ஆவர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.