பாகிஸ்தானில் வெள்ளத்துக்கு 800பேர் பலி

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2010 (17:18 IST)
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இது வரை 800 பேர் பலியாகியுள்ளனர். 15,000 வீடுகள் நாசமடைந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஒருவாரமாக பருவமழை பலமாக பெய்தது. வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் மட்டும் 36மணிநேரத்தில் 12அங்குலம் மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் 800பேர் பலியானார்கள்.மேலும் 150பேரை காணவில்லை. பாகிஸ்தான் முழுவதும் பரவலாக மழை பெய்த போதிலும், மோசமாக பாதிக்கப்பட்டது வடமேற்கு எல்லைப்புற மாநிலம் தான். இந்த மாநிலத்திலும் மாலக்கண்டு பகுதி தான் மிகமோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு மட்டும் 102பேர் பலியானார்கள். 16ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த மாநிலத்தில் 1929ம்ஆண்டுக்கு பிறகு இப்போது தான் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 45 பாலங்கள் உடைந்தன. 15ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன.விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

வெப்துனியாவைப் படிக்கவும்