அமெரிக்க அறிவியல் துறையில் இந்தியருக்கு தலைமை பதவி
வெள்ளி, 4 ஜூன் 2010 (18:16 IST)
அமெரிக்க அரசின் அறிவியல் துறையின் தலைமைப் பதவியை இந்தியர் ஒருவருக்கு அளித்துள்ளது அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அரசு.
அமெரிக்காவின் உயரிய அறிவியல் அமைப்பான `தேசிய அறிவியல் நிறுவனத்தின்' இயக்குனர் பதவிக்கு சுப்ரா சுரேஷ் (வயது 53) என்ற இந்தியரை நியமித்துள்ளதாக ஒபாமா நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட `தேசிய அறிவியல் நிறுவனத்தின்' தலைமை பதவியில் அமரும் முதல் இந்தியர் சுரேஷ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.