பின்லேடனுக்கு எதிராக அமெரிக்க மீண்டும் தேடுதல் வேட்டை

திங்கள், 7 டிசம்பர் 2009 (12:46 IST)
சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடன் ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒளிந்திருப்பதாக நம்பும் அமெரிக்கா, பின்லேடனுக்கு எதிராக புதிய தேடுதல் வேட்டையை தொடர திட்டமிடுள்ளது.

பின்லேடன் சில நேரங்களில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ள வடக்கு வாசிரிஸ்தானிலும், சில சமயம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியிலும் நடமாடுவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவரிடம், அப்படியென்றால் பின்லேடனுக்கு எதிராக அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் மீண்டும் ஒரு புதிய தேடுதல் வேட்டையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதா எனக்கேட்டபோது, அப்படித்தான் தாம் கருதுவதாக பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்