இந்திய ஐடி பணியாளர்களுக்கு கதவை திறந்துவிட வேண்டும் : பிரிட்டனிடம் பிரதிபா வேண்டுகோள்

வியாழன், 29 அக்டோபர் 2009 (16:18 IST)
மேலும் கூடுதலான இந்திய தகவல் தொழில் நுட்ப (ஐடி) பணியாளர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற அனுமதிக்கும் வகையில் அவர்களுக்கான வாய்ப்புகளை திறந்துவிட வேண்டும் என பிரிட்டனிடம் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள பிரதிபா பாட்டீல்,அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுனை நேற்றிரவு சந்தித்துப் பேசியபோதே இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இங்கிலாந்தில் இந்திய ஐடி பணியாளர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்திய பாட்டீலிடம்,அவரது இந்த ஆலோசனையை ஏற்பது குறித்து பரிசீலிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் உறுதியளித்தார்.

இரு நாட்டு நட்புணர்வை வளர்த்துக்கொள்ள ஐடி துறையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக தாம் கருதுவதாகவும் பிரவுன் மேலும் தெரிவித்ததாக பிரதிபாவுடன் சென்ற இந்திய அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்