இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்: சீனப் பிரதமர்

சனி, 24 அக்டோபர் 2009 (10:00 IST)
இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறது சீனா என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ கூறியுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் ஹூவா ஹின் நகரில் நடைபெற்றுவரும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இந்திய, சீனப் பிரதமர்கள் இன்று காலை தனியே சந்தித்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைச் சிக்கல், காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம் ஆகியன தொடர்பான பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்கள் விரிவாக பேச்சுவார்த்தையை துவக்கியபோது இவ்வாறு சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ கூறியுள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துச் சிக்கல்கள் குறுத்தும் நம்முடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்தச் சந்திப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மன்மோகனிடம் வென் ஜியாபாவோ கூறியுள்ளார்.

சீனக் குடியரசின் 60வது ஆண்டு நிறைவிற்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்