வான்புலிகள் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் இந்திய ராடார்களில் பதிவு
சனி, 11 ஜூலை 2009 (14:58 IST)
வான் புலிகள் நடத்திய அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா வழங்கிய 'இந்திரா' ராடார்கள் படம் பிடித்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பான முறையில் தப்பிச் சென்றமையால் - அதற்கு 'இந்திரா' ராடார்களின் குறைபாடுகளே காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் இதற்கு அந்த ராடார்களின் குறைபாடுகள் காரணம் அல்ல எனவும் , அங்கு நிலவிய ஏனைய குறைபாடுகளும், நெருக்கடிகளுமே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வழங்கியிருந்த ராடார்கள் இரட்டைப் பரிமாணத்தை உடையவை.ஆனால், சிறிலங்கா முப்பரிமாண ராடார்களையே விரும்பியுள்ளது.
இந்நிலையில் சீனாவிடம் இருந்து இரண்டு ராடார்களைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசு முற்பட்ட போதிலும் , ஒரு ராடார் மட்டுமே சீனாவிடம் இருந்து கிடைத்திருந்தது.
இருந்தபோதிலும் வான்புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இந்தியா வழங்கிய 'இந்திரா' ராடார்களே பயன்படுத்தப்பட்டன.
தரையை அடிப்படையாகக்கொண்ட வான் பாதுகாப்புப் பிரிவு தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம், கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் தென்னை மரங்கள் மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருந்தமையாகும்.விங் கமாண்டர் சேனக பெர்ணான்டோபுள்ளேயும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நெருக்கடி நிலையை வெற்றிகொள்வதற்கு கட்டுநாயக்காவிலும், கரவலப்பிட்டியவிலும் சிறிலங்கா வான்படை மேடைகளை அமைத்திருந்தது.
கொழும்பை சூழவர முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைகள் மீது உயர்ந்த கட்டடங்களில் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் வான் பாதுகாப்பு முறைமைகளை ஏமாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் பல தொழில்நுட்ப உபாயங்களைக் கையாண்டனர்.
மரங்களுக்கு மேலாகப் பறப்பதைக் கண்டுபிடிக்க முடியாதவாறும் அதற்கு அப்பால் தமது இலக்குகளை அணுகும்போது தமது சகல மின்விளக்குகளையும் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகின்றது.