போரை நிறுத்த முடியாது: சிறிலங்கா திட்டவட்டம்

வியாழன், 14 மே 2009 (15:31 IST)
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புப் பேரவை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் விடுத்துள்ள வேண்டுகோளை சிறிலங்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்க அரசின் ஊடகத்துறை அமைச்சர் லட்சுமண் யாபா, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கைக்கு அடிபணியப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இலங்கையைப் போல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் போர் நடந்து வருகிறது. ஆனால் அங்குள்ள அரசுகளை போர்நிறுத்தம் செய்யவோ, அமைதி உடன்பாடு செய்து கொள்ளவோ யாரும் வலியுறுத்துவதில்லை. இலங்கை அரசுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கிறது.

சர்வதேச உத்தரவுகளுக்கு நாங்கள் கீழ் படிய முடியாது. அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக போரை நிறுத்த மாட்டோம். சர்வதேச சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதற்காக போரை நிறுத்துவது சரியாக இருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்