வன்னியில் சிறிலங்கப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணைத் தாக்குதலில் 9 சிறுவர்கள் உள்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளை நோக்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிலங்கப் படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை, பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 9 சிறுவர்கள் உள்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புலிகள் ஆதரவு இணையத் தளமான புதினம் தெரிவிக்கிறது.