ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இங்கிலாந்து திரைத்துறை விருது

திங்கள், 9 பிப்ரவரி 2009 (11:20 IST)
ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லினியருக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இங்கிலாந்து திரைத்துறை மற்றும் தொலைக்காட்சிகளுக்கான பாஃப்தா (BAFTA) விருது வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ஹாலிவுட் இயக்குனர் டோனி போயல் இயக்கிய ‘ஸ்லம்டாக் மில்லியனர’ சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் 7 பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது,

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக கடந்த சில தினங்களுக்கு முன் ‘கோல்டன் குளோப’ விருதை பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது இங்கிலாந்து திரைத்துறையின் பாஃப்தா விருதையும் பெற்றுள்ளார். இவ்விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.

ரசுல் பூக்குட்டிக்கு விருது: கேரளாவைச் சேர்ந்த ரசுல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலித் தொகுப்புக்கான பாஃப்தா விருது ஸ்லம்டாக் மில்லியனருக்காக வழங்கப்பட்டுள்ளது. ஒரே தருணத்தில் இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு பாஃப்தா விருது வழங்கப்பட்டுள்ளது இந்தியர்களை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்