பிரதமர் மன்மோகனுடன் பேச ஒபாமா விருப்பம்

வியாழன், 29 ஜனவரி 2009 (13:25 IST)
இருதய சிகிச்சைக்கு பின்னர் ஓய்வெடுத்து வரும் பிரதமர் மன்மோகன் சிங் பூரண குணமடைந்த பின்னர் அவருடன் பேச அதிபர் பராக் ஒபாமா ஆவலுடன் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், பிரதமர் குணமடைந்தவுடன் அவருடன் பேசும் தருணத்தை ஒபாமா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

இரு தலைவர்கள் எப்போது பேசினாலும் அதுகுறித்த செய்திக் குறிப்பு உடனடியாக வெளியிடப்படும் என்றும் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்தார்.

கடந்த 24ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்திருந்த ஒபாமா, தற்போது 2வது முறையாக வாழ்த்துத் தெரிவித்ததுடன், அவருடன் பேச ஆவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்