இந்தோனேஷியாவின் சுமத்ராவில் உள்ள பாதூ தீவின் மேற்குக் கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமத்ரா தீவின் சிபோல்கா பகுதியில் இருந்து தென்மேற்கே 232 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 35 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை 6.27 மணியளவில் (இந்திய நேரம்) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.